தனியார் மருத்துவ கல்லூரி ஊழியருக்கு கொலை மிரட்டல்


தனியார் மருத்துவ கல்லூரி ஊழியருக்கு கொலை மிரட்டல்
x

அரியாங்குப்பத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 27). இவர் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் மணவெளி பகுதியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பராமரிப்பின் கீழ் செயல்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். முன்பு இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதே பகுதியை சே்ாந்த அய்யனாரப்பன் (40) நடத்தி வந்தார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு அய்யனராப்பன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சேதப்படுத்தியதுடன், அருள்ராஜை இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யனாரப்பனை கைது செய்தனர்.


Next Story