தாய்-மகன்களுக்கு கொலை மிரட்டல்


தாய்-மகன்களுக்கு கொலை மிரட்டல்
x

வில்லியனூர் அடுத்த கோர்க்காடு பகுதியில் நிலத்தகராறில் தாய்-மகன்களுக்கு கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அடுத்த கோர்க்காடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 72). அவரது மகன்கள் தவமணி (55), மாசிலாமணி (52). இவர்களுக்கு சொந்தமான நிலம் கோர்க்காடு காலனி சுடுகாடு செல்லும் வழியில் உள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி விடுதலை நகரை சேர்ந்த புவனேஸ்வரி, சுரேஷ்குமார் மற்றும் யோகநாதன் ஆகியோர் அந்த நிலத்தில் மண்ணை கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் சமம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற தவமணி மற்றும் அவரது மகன்கள் அது தங்களுடைய நிலம் என்று எதற்காக மண் கொட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அப்போது புவனேஸ்வரி மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story