தொழிலாளிக்கு கொலை மிரட்டல்


தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
x

புதுவை அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான வசந்தபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). பெரிய மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடன் சின்னையாபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (32) வேலைபார்த்து வருகிறார். கடந்த 14-ந் தேதி கண்ணன், தியாகுமுதலியார் வீதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். அப்போது அங்கு ரஞ்சித்தும், அவரது நண்பர் அசோக்கும் மது குடித்துக்கொண்டு இருந்தனர். குடிபோதையில் இருந்த 2 பேரும் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்ணன் கண்டித்தார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் கண்ணனை 2 பேரும் சேர்ந்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story