திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

காரைக்காலில் இந்தி திணிப்பை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

காரைக்கால்

காரைக்காலில் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடற்கரை சாலையில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மண்டல திராவிடர் கழக மாணவர் அணி தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாணவர் அணி அமைப்பாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் செந்தமிழன் உள்பட பலர் கலந்துகொண்டு இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

1 More update

Next Story