பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x

புதுவை துப்புராயன்பேட்டை பச்சை வாழியம்மன் உடனுறை மண்ணாதீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சேரி

புதுவை துப்புராயன்பேட்டை பச்சை வாழியம்மன் உடனுறை மண்ணாதீஸ்வரர் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் நேற்று வள்ளி-தெய்வானை உடனுறை முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி இன்று மாலை கோவில் முன்பு நடந்தது. முன்னதாக மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 5 மணிக்கு கரகம் புறப்பாடும் நடந்தது. மாலையில் திரளான பக்தர்கள் தீமித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இரவில் ரிஷப வாகனத்தில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது.இன்று (சனிக்கிழமை) இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story