வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

திருத்தப் பணிகளுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் நாளை கலெக்டர் வல்லவன் வெளியிடுகிறார்.

புதுச்சேரி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1-1-2024-ஐ தகுதி நாளாக கொண்டு இந்த ஆண்டுக்கான சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்கு வசதியாக நாளை (வெள்ளிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. புதுவை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான வல்லவன் காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். மேலும் 18 வயது பூர்த்தியடையும் 50 மாணவர்களை கொண்டு மரக்கன்று நடும் விழா தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் மற்றும் கலெக்டர் வல்லவன் முன்னிலையில் தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியையொட்டி நவம்பர் 4, 5, 18, 19-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

1 More update

Next Story