வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம்


வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு முகாம்
x

புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

புதுச்சேரி

புதுவையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் புதிதாக பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்யலாம். இதையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நேற்று தொடங்கியது. சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று புதிதாக பெயர் சேர்க்க, நீக்க அதற்குரிய விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இளைஞர்கள் பலர் புதிய வாக்காளர்களாக சேர ஆர்வமுடன் முகாம்களுக்கு சென்று விண்ணப்பித்தனர். இந்த முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மேலும் வருகிற டிசம்பர் மாதம் 3 மற்றும் 4-ந்தேதிகளிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது.

1 More update

Next Story