நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு


நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு
x

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க ரங்கசாமியிடம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி

புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமையில் அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆன பிறகும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், வேலை செய்யும் இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் சாதி வெறியின் காரணமாக ஏற்றத்தாழ்வுகள் இருந்து வருகிறது.

அரசியலமைப்பு சட்டம் 1950 பிரிவு 15-ன்படி சாதி, மதம், இனம், பாலினம், குடிவழி, பிறப்பிடம், வாழ்வியல் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனை கதைக்களமாக கொண்டு தமிழக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி உள்ளது. பிரிவினைகளில் புதைந்தவர்களை மீட்டு சமூக நீதியை வென்று சமத்துவ சமுதாயத்தை உருவாக்க ஊக்கப்படுத்தும் இப்படத்துக்கு கேளிக்கை வரியை ரத்துசெய்து படக்குழுவினரை ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.



Next Story