சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி


சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

புதுவை பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரியில் உலக சுற்று சூழல் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி

புதுவை பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரியின் உயிர் வேதியியல்துறை குழந்தை தலைமைத்துவத்துக்கான அறக்கட்டளையுடன் இணைந்து உலக சுற்று சூழல் தினத்தை நினைவுகூறும் வகையில் ஆவண திரையிடல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியில் உயிர் வேதியியல்துறை உதவி பேராசிரியை வரலட்சுமி வரவேற்று பேசினார். 'பறவை கதைகள்' என்ற தலைப்பில் சிவசக்தி எழுதிய புத்தகமும் வெளியிடப்பட்டது. அவர் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பசுமையான எதிர்காலத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது காலத்தின் தேவை என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்துவதே இந்த விழிப்புணர்வு திட்டத்தின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. முடிவில் உயிர் வேதியியல் துறைத்தலைவர் தாரகேஸ்வரி நன்றி கூறினார்.


Next Story