தவறி விழுந்த தொழிலாளி சாவு


தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

பாகூரில் பணியின் போது தவறி விழுந்த தொழிலாளி சாவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்-

கிருமாம்பாக்கம் அடுத்த கந்தன்பேட் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையின் மேற்கூரையில் சூரியஒளி உள்ளே வருவதற்காக பிளாஸ்டிக் ஷீட் பொருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்காக பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் ஈடுபட்டு வந்தனர். அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் ரம்சான் (வயது 38) என்பவர் கட்டிடத்தின் மேற்கூரையில் அமர்ந்து வேலை பார்த்தார். பாதுகாப்பு கவசம் எதுவும் அணியாமல் வேலைபார்த்த அவர் திடீரென கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு கவசம் அணியாமல் பணியில் ஈடுபடுத்தியதாக ஒப்பந்ததாரர் ஜோஷி, கண்காணிப்பாளர் ஜாவித் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story