விவசாயிகள் சாலை மறியல்


விவசாயிகள் சாலை மறியல்
x

புதுச்சேரியில் ஏரியை பாதுக்காக்க கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மறியலில் ஈடுப்பட்ட 112 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டம் திரு-பட்டினம் படுதார்கொல்லையில் உள்ள சிற்றேரியை ஆழப்படுத்துவதாக கூறி, அதிக அளவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அங்குள்ள விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், மாவட்ட வருவாய்த்துறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், திரு-பட்டினம் விவசாய சங்க கூட்டமைப்பின் சார்பில், அதன்தலைவர் குமார் தலைமையில் மேலையூர் பாசனதாரர்கள் சங்க தலைவர் தமீம், கீழையூர் விவசாயிகள் சங்க தலைவர் மாதவன் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மறியல் போராட்டத்துக்காக ஊர்வலமாக வந்தனர்.

அவர்களை திரு-பட்டினம் போலீஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், படுதார்கொல்லை சிற்றேரியில் மண் எடுப்பதை உடனடியாக தடுக்க வேண்டும், ஏரியின் கரைகளை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களை கலைந்துபோகுமாறு போலீசார் எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டதாக 112 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story