பாத்திமா அன்னை ஆலய பெருவிழா


பாத்திமா அன்னை ஆலய பெருவிழா
x

தட்டாஞ்சாவடி பாத்திமா அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 69-வது ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு அருட்தந்தை பீட்டர் ராஜேந்திரன் தலைமையில் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் தினமும் காலை 6 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலியும், தொடந்து நற்கருணை ஆசிர், மறையுரை நடக்கிறது. வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெற உள்ளது.

1 More update

Next Story