பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

புதுவையில் கணவன், மனைவி இடையே ‘ஈகோ’ பிரச்சினையால் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்

வில்லியனூர் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்கிற கவுதமன். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயசுந்தரி (வயது 28), தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் விஜயசுந்தரிக்கு கோவையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்துள்ளது. இதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே ஈகோ பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக கவுதம் தனது மாமனார் ராமமூர்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த விஜயசுந்தரி வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ராமமூர்த்தி அளித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணம் ஆன 3 ஆண்டுகளில் விஜயசுந்தரி தற்கொலை செய்துகொண்டதால், வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்று தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story