பெண் தூக்குப்போட்டு தற்கொலை

புதுவை முத்தரையர்பாளையம் அருகே குடும்ப தகராறின் காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூலக்குளம்
புதுவை முத்தரையர்பாளையம் நெல்லு மண்டி வீதியைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவரது மகள் தேவகி (வயது 33). இவருக்கும், பீச்சவீரன்பேட்டை சேர்ந்த பாலன் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பாலனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன் தேவகி எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பின் அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் மீண்டும் கண்வன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் தேவகி தனது தாய்வீட்டில் மனவேதனையுடன் இருந்துவந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






