தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை


தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை
x

புதுச்சேரி தீயணைப்பு துறை சார்பில் காலாப்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

காலாப்பட்டு

தீயணைப்பு சேவை வாரத்தை முன்னிட்டு புதுச்சேரி தீயணைப்பு துறை சார்பில் காலாப்பட்டில் உள்ள கெம்பேப் ஆல்கலீஸ் நிறுவனத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. உயரமான கட்டிடத்தின் மீது தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி தீயணைப்பு அதிகாரி இளங்கோ, உதவி அதிகாரி ரிக்கோஸ் சந்திரா, காலாப்பட்டு தீயணைப்பு நிலைய அதிகாரி லட்சுமணன், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story