உணவு திருவிழா


உணவு திருவிழா
x

காரைக்காலில் கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு திருவிழா நடைபெற்றது

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியில், பாரம்பரிய உணவு மற்றும் விளையாட்டு திருவிழா நடந்தது. மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், கல்லூரி முதல்வர் கிருஷ்ண பிரசாத், வக்கீல் சங்கரி, டாக்டர் வைக்கமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவர்களிடம் சத்துணவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாரம்பரிய உணவுத் திருவிழாவும், பாரம்பரிய விளையாட்டுகளான கிட்டிப்புள், பல்லாங்குழி, பம்பரம், உரியடி, கபடி, தாயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு திருவிழாவும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சமுதாய நலப்பணித் திட்டத்தின் திட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், 12 பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.


Next Story