கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்குரூ.1 கோடியே 93 லட்சம் மானியம்


கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்குரூ.1 கோடியே 93 லட்சம் மானியம்
x

கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்கு மானியமாக ரூ.1 கோடியே 93 லட்சம் வழங்கவும், கிராம சாலைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி

கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்கு மானியமாக ரூ.1 கோடியே 93 லட்சம் வழங்கவும், கிராம சாலைகள் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

விபத்து காப்பீடு திட்டம்

புதுவையில் முதல்-அமைச்சரின் விபத்து காப்பீடு திட்டம் (ரூ.2 லட்சம்) கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கான பிரிமீய தொகை ரு.92 லட்சத்து 27 ஆயிரத்து 920-க்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு ரூ.59 லட்சத்து 69 ஆயிரம் மானியம் வழங்கவும், நிதி ஆயோக்கிற்கு உதவியாக புதுவை மையம் அமைக்கவும் திட்டத்துறைக்கு அனுமதி அளித்துள்ளார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நிலைகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கவும் அனுமதி அளித்துள்ளார்.

வீடுகட்டும் சங்களுக்கு மானியம்

புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் ஆபரேசன்களின்போது பயன்படும் உயர்நிலை மயக்க மருந்து பணிநிலையம் (அனஸ்தீசியா ஒர்க் ஸ்டேசன்) அமைக்க சுகாதாரத்துறைக்கு ரூ.3 கோடியே 32 லட்சம் வழங்க அனுமதி அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தொடக்கநிலை கூட்டுறவு வீடுகட்டும் சங்கங்களுக்கு மானியமாக ரூ.1 கோடியே 68 லட்சத்து 21 ஆயிரத்து 994-ம், வட்டியமானியமாக ரூ.25 லட்சமும் வழங்க அனுமதி அளித்துள்ளார். அரசின் கியாஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதாரை ஒரு அடையாளமாக அங்கீரித்து குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு அனுமதி அளித்துள்ளார்.

சாலைகள் அமைக்க ரூ.5 கோடி

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் கிராமப்புற சாலைகள் அமைக்க மாநில அரசின் பங்காக ரூ.5 கோடி வழங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவைகள் தவிர மேலும் சில கோப்புகளுடன் ஒட்டுமொத்தமாக 36 கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.Next Story