அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளுக்கு 'கெடு'


அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளுக்கு கெடு
x

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை 30 நாட்களுக்குள் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை 30 நாட்களுக்குள் முறைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனுமதியின்றி இணைப்பு

உழவர்கரை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள அரும்பார்த்தபுரம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, ஆலங்குப்பம் உள்ளிட்ட வார்டுகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வார்டுகளில் பல குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல குடியிருப்புகள் நகராட்சியின் அனுமதியின்றி இணைப்பு எடுத்துள்ளனர். இந்த வார்டுகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் அதை முறைப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அனுமதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்துள்ளவர்கள் உரிய வகையில் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் இணைப்பை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

துண்டிப்பு

இதனால் அபராதம், இணைப்பு துண்டித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தவிர்க்கலாம். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்தில் செலுத்துவது குடிமக்களுடைய கடமையாகும்.

குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள் உழவர்கரை நகராட்சி அலுவலகம் மற்றும் www.oulmun.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்த தவறினால் எந்தவித முன் அறிவிப்புமின்றி அனுமதிபெறாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story