ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 லட்சம் மோசடி


ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 லட்சம் மோசடி
x

புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி சக ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஜிப்மர் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

ஏலச்சீட்டு நடத்தி சக ஊழியரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஜிப்மர் பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏலச்சீட்டு

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் அனிசன் (வயது 53). ஜிப்மர் ஊழியர். இவருடன், புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்த வனஜா (54) என்பவரும் வேலை பார்த்து வருகிறார்.

வனஜா ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் அனிசனும் சீட்டு போட்டுள்ளார். ஆனால் சீட்டு தவணை காலம் முடிந்த பின்னரும், வனஜா அனிசனுக்கு சீட்டு பணம் ரூ.2 லட்சத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மோசடி வழக்கு

சீட்டு பணத்தை பலமுறை கேட்டும் தராததால் ஏமாற்றமடைந்த அனிசன் இதுதொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வனஜா மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் வனஜா பலரிடம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story