பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி


பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி
x

புதுவை திலாசுப்பேட்டை அருகே நகை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

திலாசுப்பேட்டை அய்யனார்கோவில் வீதியை சேர்ந்தவர் பாலாஜி ராவ். அவரது மனைவி அமிதா (வயது 48). இவர்கள் இருவரும் கோவில் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அப்போது கோவிலுக்கு வந்த தனியார் நிறுவன ஊழியரான ரெட்டியார்பாளையம் சாய் சத்யா நகரை சேர்ந்த ரூபேஷ்குமார் (வயது 49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் தங்க நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பி அமிதா அவரிடம் சிறுக சிறுக சேமித்த பணத்தை கொடுத்துள்ளார். அதன்படி கடந்த 2020 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் நகை வாங்க ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ரூபேஷ்குமார் நகை எதையும் வாங்கி தரவில்லை.

பலமுறை கேட்டும் நகையோ, பணமோ கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமிதா, இதுதொடர்பாக கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரூபேஷ்குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story