ஆந்திராவில் இருந்து மாகிக்கு கஞ்சா கடத்தல்

ஆந்திராவில் இருந்து மாகிக்கு கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாகி
ஆந்திராவில் இருந்து மாகிக்கு கஞ்சா கடத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா கடத்தல்
மாகி போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர வல்லாட் உத்தரவின் பேரில் மாகி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் பந்தக்கால் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அந்த காரில் கஞ்சா இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக காரில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பந்தக்கால் பகுதியை சேர்ந்த முகமது சையத் (வயது 24), முகமது பெல்ஸ் (23), தலச்சேரியை சேர்ந்த அலோக் (23), சரோன் (24) என்பதும் ஆந்திராவுக்கு சுற்றுலா சென்ற அவர்கள் கஞ்சாவை வாங்கி கடத்தி வந்ததும் தெரியவந்தது.
4 பேர் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 580 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மாகி சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட முகமது சையத், முகமது பெல்ஸ் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.