மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

புதுவை புதிய பஸ்நிலையத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த நேர காப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுவை புதிய பஸ்நிலையத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த நேர காப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

தங்க சங்கிலி பறிப்பு

புதுவை பஸ் நிலைய பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று இரவு பொம்மையர்பாளையத்தை சேர்ந்த பஸ் நிலையத்தில் பூ விற்கும் நவநீதம் (வயது 68) என்ற மூதாட்டி அரசு பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தார்.

பஸ் நிலையத்தை விட்டு வெளியே பஸ் வந்த நிலையில், அங்கிருந்த மர்ம நபர் பஸ்சுக்கு வெளியில் நின்றபடி நவநீதம் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். சங்கிலி பறிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கூச்சலிட்டார். அவரை சக பயணிகள் விரட்டியபோதும் பிடிக்க முடியவில்லை.

நேர காப்பாளர் கைது

இதுகுறித்து நவநீதம் பஸ் நிலையத்தில் உள்ள புறக் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்த போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த துணிகர செயலில் ஈடுபட்டது. புதுவை ராஜா நகரை சேர்ந்த வளர் என்ற ஜெய்கணேஷ் (43) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பஸ் நிலையத்தில் நேர காப்பாளராக (டைம் கீப்பர்) வேலை செய்வதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அந்த தங்க சங்கிலியை டைம் கீப்பர்கள் ஓய்வெடுக்கும் இடம் அருகே தனது பையில் வைத்துள்ளதை கூறினார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தங்க சங்கிலியையும் மீட்டனர்.

பாராட்டு

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், குற்றப்பிரிவு காவலர்கள் பிரேம்குமார், சத்தியவேல், செல்லதுரை, மோகன் ஆகியோரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பாராட்டினார்.


Next Story