அரசு செவிலியர் கல்லூரி தொடங்க கவர்னர் ஒப்புதல்


அரசு செவிலியர் கல்லூரி தொடங்க கவர்னர் ஒப்புதல்
x

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

செவிலியர் கல்லூரி

புதுவை மாநிலத்தில் 2 புதிய செவிலியர் கல்லூரி தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த நிலையில் தற்போது செவிலியர் கல்லூரிகள் தொடங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்பதல் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் நடப்பு கல்வி ஆண்டில் (2023-24) பெருந்தலைவர் காமராஜர் மருத்துவக் கல்லூரிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 60 மாணவர்கள் கொண்ட புதிய செவிலியர் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

காரைக்கால்

காரைக்கால் பகுதியில் சுகாதாரத் துறையின் மூலம் செயல்படும் அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 40 மாணவர்கள் படிக்கும் வகையில் புதிய செவிலியர் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் இந்த ஆண்டு புதுச்சேரியில் மேலும் கூடுதலாக 100 மாணவர்கள் அரசு கல்லூரியில் செவிலியர் படிப்பு படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story