தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்
காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்காததால் தூக்குப்போட்டு பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டதாரி வாலிபர்
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை முத்துநகர் 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 48). தொழிலாளி. அவரது மனைவி ஜோதி. இவர்களது இளைய மகன் உதய பிரகாஷ் (21). பி.பி.ஏ. படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் உதயபிரகாஷ், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோரிடம் வற்புறுத்தி உள்ளார். ஆனால் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெய்லர் தற்கொலை
வில்லியனூர் கணுவாப்பேட் புதுநகரை சேர்ந்தவர் வேல்முருகன் (57). டெய்லர். இவரது மனைவி சரசு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் வேல்முருகனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதனையடுத்து உருவையாறில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்தார். உடல் நிலை சரியில்லாததால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.