196 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு


196 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு
x

திருக்கனூர்

புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் ஸ்ரீ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு முதுகலை பட்டதாரி மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், அன்னை சம்பூரணி அம்மாள் செவிலியர் கல்லூரி புல முதல்வர் டாக்டர் ஜெயசீலன் தேவதாசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் முத்தமிழ்செல்வி வரவேற்றார்.

விழாவில் இளங்கலை, முதுகலை படித்த 196 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும் புதுச்சேரி பல்கலைக்கழக அளவில் இளங்கலை பட்டப்பிரிவில் (2016-2020-ம் ஆண்டு) முதல் மதிப்பெண் பெற்ற அபிநயா, முதுகலை பட்டப்பிரிவில் (2018-2020) முதல் மதிப்பெண் பெற்ற கிரிஸ்டி ரெபேகா ஆகியோருக்கு சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பொருளாளர் ராஜராஜன், இயக்குனர் டாக்டர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை டீன் கார்த்திகேயன், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆராய்ச்சி டீன் கலைச்செல்வன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் இணை பேராசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்.

1 More update

Next Story