பசுமை காடுகளை டெல்லி குழுவினர் ஆய்வு


பசுமை காடுகளை டெல்லி குழுவினர் ஆய்வு
x

தாகூர் கலைக் கல்லூரியில் பசுமை காடுகளை டெல்லி குழுவினர் ஆய்வு செய்தனர்.

லாஸ்பேட்டை

புதுவை லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரியில் அரிய வகை மரங்கள், செடிகொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் முயல், வாத்து, புறா, தேனீ போன்றவை இயற்கை சூழலுடன் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நகர்ப்புற பசுமை காடுகளில் புத்தர் தோட்டம், கொரோனா நினைவு பூங்கா, வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் ஆகியோர் பெயரில் தோட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் டெல்லி நிகழ்வு மேலாண்மை சங்கத்தின் தலைவர் பவின் ஹரியாணி, புதுவை அரவிந்தோ சொசைட்டியின் இயக்குனர் பிரதீப் பிரேம்ஜி ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த தோட்டத்தை ஆய்வு செய்து பார்வையிட்டனர். அவர்கள் கொரோனா நினைவிடத்தில் மரக்கன்று நட்டு மரியாதை செலுத்தினார்கள். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் பசுமை சூழல் குறித்து விளக்கி கூறினார்.


Next Story