ஜி.எஸ்.டி. செயலி பதிவேற்றம்செய்யும் வாடிக்கையாளருக்கு பரிசு

கொள்முதல் பொருட்களுக்கான ரசீதை ஜி.எஸ்.டி. செயலியில் பதிவேற்றம் செய்யும் வாடிக்கையாளருக்கு குலுக்கல் முறையில் பரிசுத்தொகை வழங்கப்படும் என வணிக வரித்துறை ஆணையர் அறிவித்துள்ளாா்.
புதுச்சேரி
புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர் தலைமையில் வணிகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் வணிகவரி துறை அதிகாரி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூர் பேசுகையில், 'மத்திய அரசு புதுச்சேரியில் 'எனது விலைப்பட்டியல் எனது உரிமை' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதில் ஜி.எஸ்.டி. பதிவு பெற்ற நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.200-க்கு மேல் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கான ரசீதை மத்திய அரசின் ஜி.எஸ்.டி.என். என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விலைப்பட்டியல் ரசீது பிரதி மாதம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்து குலுக்கல் முறை முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது' என்றார்