30 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு


30 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
x

புதுவை ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், கோரிமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, காணாமல் போன 30 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மூலக்குளம்

புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம், மேட்டுப்பாளையம், கோரிமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, காணாமல் போன 30 செல்போன்களை போலீசார் மீட்டனர். அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.


Next Story