தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

மது குடிப்பதை கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்

புதுச்சேரி

புதுச்சேரி முத்தியால்பேட்டை வசந்த நகரை சேர்ந்தவர் கண்ணன். பெரிய மார்க்கெட்டில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று காலை வீட்டில் வைத்து கண்ணன் மது குடித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி ஜெயந்தி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத போது ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story