வாணிதாசனார் சிலைக்கு மரியாதை


வாணிதாசனார் சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 22 July 2023 10:11 PM IST (Updated: 22 July 2023 10:11 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வாணிதாசனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..

புதுச்சேரி

கவிஞர் வாணிதாசனாரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை அரசு ஆஸ்பத்திரி எதிரே பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு சபாநாயகர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் தமிழ் அறிஞர்கள், கவிஞர் வாணிதாசனாரின் குடும்பத்தினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

1 More update

Next Story