கண்டமங்கலம் அருகே கொக்கி போட்டு வீடுகளுக்கு மின்சாரம் திருட்டு


கண்டமங்கலம்  அருகே கொக்கி போட்டு வீடுகளுக்கு மின்சாரம் திருட்டு
x

கொக்கி போட்டு வீடுகளுக்கு மின்சாரம் திருட்டு

கண்டமங்கலம்

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதியாக கலிஞ்சிகுப்பம் கிராமம் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு மின் தேவைகளுக்காக பிரதான சாலையில் செல்லும் மின் கம்பியில் இருந்து கொக்கி போட்டு தங்கள் வீடுகளுக்கு மின்சாரம் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, தமிழ்நாடு மின்வாரியமானது, மின் கட்டணம் நிர்ணயித்த தேதிக்குள் கட்டவில்லை என்றால் தொகைக்கு 3 மடங்கு அபராதம் வசூலிக்கிறது. வீடுகளுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து மின் வாரியத்தில் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தால், மாதம் மாதம் மட்டுமே ஆய்வுக்கு செல்வோம் என அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

1 More update

Next Story