தோட்டக்கலை தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி


தோட்டக்கலை தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி
x

காரைக்கால் அரசு வேளாண் கல்லூரியில் தோட்டக்கலை தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த செருமாவிளங்கையில் உள்ள பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, பட்டியல் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தோட்டக்கலை தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு பயிற்சி முகாமை நடத்தியது. முகாமுக்கு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சஞ்சய் குமார் சிங், பஜன்கோவா முதல்வர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானிகள் செந்தில்குமார், சங்கர் ஆகியோர் தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். முடிவில் தோட்டக்கலைத்துறை பேராசிரியர் சுந்தரம் நன்றி கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், உரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.


Next Story