மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 195 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 195 மனுக்கள் பெறப்பட்டன
x

காரைக்காலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 195 மனுக்கள் பெறப்பட்டன.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. துணை கலெக்டர்கள் ஜான்சன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட 116 மனுக்களில் 113 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலெக்டர் பாராட்டினார். தொடர்ந்து பிற்பகல் 1 மணி வரை மொத்தம் 195 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் மஞ்சள் நிற ரேஷன் அட்டையை சிகப்பு நிற ரேஷன் அட்டையாக மாற்றி தர கோரியும், எல்.ஜி.ஆர். பட்டா வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கி தரும்படியும், மழைக்காலத்திற்கு முன்னதாக, சாலை சாக்கடைகளை சுத்தம் செய்து தரும்படியும் கோரப்பட்டிருந்தது. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார்.


Next Story