திருபுவனை பகுதியில் சுழற்சி முறையில் மின்நிறுத்தம்


திருபுவனை பகுதியில் சுழற்சி முறையில் மின்நிறுத்தம்
x

திருபுவனை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திருபுவனை

திருபுவனை துணை மின்நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்டார் கோவில், திருபுவனை, திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு பாளையம், மதகடிப்பட்டு, நல்லூர், குச்சிப்பாளையம், திருபுவனை, சின்னபேட், திருமுருகன் நகர், கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார்பாளையம், குச்சிப்பாளையம், சிலுக்காரி பாளையம், பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானூர், சன்னியாசிக்குப்பம், பிப்டிக் எலக்ட்ரானிக் பார்க், இந்திராநகர், கொத்தபுரி நத்தம், செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, விநாயகம்பட்டு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் சுழற்சி முறையில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.


Next Story