சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்து கல்வெட்டு


சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்து கல்வெட்டு
x

கனகன் ஏரியில் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்து கல்வெட்டு வைக்கப்பட்டது.

புதுச்சேரி

75-வது சுதந்திர தின அமுதபெருவிழா நிறைவு பெறுவதையொட்டி சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவிக்கும் விதமாக புதுச்சேரி கனகன் ஏரியில் கல்வெட்டு அமைக்கப்பட்டது. இதனை சிவசங்கர் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் உழவர்கரை ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், கனகன் ஏரி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புனித மண் ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்.

1 More update

Next Story