மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ், போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்ரமணியம், நிதின் கவுஹால் ரமேஷ், மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, வட்ட ஆய்வாளர் சவுந்தரராசு, கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி, காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலய முதன்மை பங்குத்தந்தை ஜோஸ்வா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story