புதுச்சேரியில் கம்பன் விழா


புதுச்சேரியில் கம்பன் விழா
x

புதுச்சேரி கம்பன் விழாவை வருகிற 12-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

புதுச்சேரி

புதுச்சேரி கம்பன் விழாவை வருகிற 12-ந் தேதி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

கம்பன் விழா

புதுச்சேரி நகராட்சி கம்பன் கலையரங்கில் கம்பன் விழா வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க நாளான 12-ந் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி அரங்க.மகாதேவன் கம்பன் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவேற்புரையாற்றுகிறார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து விழா மலர் வெளியீடு மற்றும் புதுவை மாநில சிறந்த தமிழ் புலவர்களுக்கான பரிசுகளை சபாநாயகர் செல்வம் வழங்குகிறார். தொடர்ந்து நூல்வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன்குமார், வைத்திலிங்கம் எம்.பி., அனிபால் கென்னடி மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள். அதையடுத்து காலை 11.30 மணிக்கு 'அன்னவர்க்கே சரண் நாங்களே' என்ற தலைப்பில் எழிலுரையும், மாலை 5 மணிக்கு 'புகழுக்கும் இறுதியுண்டோ' என்ற தலைப்பில் தனியுரையும், மாலை 6.30 மணிக்கு 'கம்பனில் கற்கலாம்'கருத்தரங்கம் ஆகியவை நடக்கிறது.

கவியரங்கம்

13-ந் தேதி காலை 9 மணிக்கு 'வியத்தகு தாய்மை' என்ற தலைப்பில் இளையோர் அரங்கமும், காலை 10.15 மணிக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசு வழங்கல் நிகழ்ச்சியும், 10.45 மணிக்கு 'இலக்குவனின் சீற்றம் ஏற்புடையதன்று' என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும், மாலை 5 மணிக்கு 'என்னை நன்றாக படைத்தனன்' என்ற தலைப்பில் கவியரங்கமும், மாலை 6.30 மணிக்கு 'சேர்ந்தவருள் சிறந்தவர்' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடக்கிறது.

14-ந் தேதி காலை 9 மணிக்கு 'காட்சியும், மாட்சியும்' என்ற தலைப்பில் சிந்தனை அரங்கமும், காலை 11.30 மணிக்கு 'பொய்மை அரவு' என்ற தலைப்பில் தனியுரையும், மாலை 4.30 மணிக்கு 'கம்பனும் வாழ்வியலும்' என்ற தலைப்பில் நாட்டிய அரங்கமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு முதல் நாள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நடக்கிறது.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி கம்பன் கழக தலைவர் செல்வகணபதி எம்.பி., செயலாளர் சிவக்கொழுந்து ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story