லாரி டிரைவருக்கு அடி-உதை


லாரி டிரைவருக்கு அடி-உதை
x

நிரவியில் லாரி டிரைவரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிரவி

நாகை மாவட்டம் கணபதிபுரத்தைச்சேர்ந்தவர் தர்மராஜ் (வயது43). லாரி டிரைவர். நேற்று இவர் தனது நண்பா்களுடன் விழிதியூரில் உள்ள மதுபான கடைக்கு மது அருந்த வந்தார்.

பின்னர் அவர் வீட்டுக்கு புறப்பட்டபோது காரைக்காலை அடுத்த விழிதியூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (24), முருகானந்தம் (23) ஆகியோர் தர்மராஜ் மீது மோதுவது போல் மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட தர்மராஜை 2 பேரும் சேர்ந்து ஆபாசமாக திட்டி அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story