கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி
ஜிப்மரில் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாடடத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் ஜிப்ரை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க உள்ளதாக குற்றம் சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகளின் போராட்டத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்தார். விளம்பரம் தேவை என்றால் தமிழ்நாட்டில் வைத்துக்கொள்ளட்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு புதுவை விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகளின் வக்கீல்கள் அணி சார்பில் புதுவை கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வக்கீல்கள் அணி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story






