ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை


ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை
x
தினத்தந்தி 21 Aug 2023 5:21 PM GMT (Updated: 21 Aug 2023 6:14 PM GMT)

புதுவையில் சார்பில் ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி

கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாரம் அவ்வை திடலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார், அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாநில செயலாளர் சலீம் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், பொருளாளர் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.


Next Story
  • chat