மாகி மண்டல அதிகாரி அலுவலகம் முற்றுகை


மாகி மண்டல அதிகாரி அலுவலகம் முற்றுகை
x

மாகி மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாகி

மாகி மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகை

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்த கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தநிலையில் மாகி மண்டல அதிகாரி அலுவலகத்தை இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பினர் நுழைவு வாயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்தனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடுப்புகளை தள்ளிக்கொண்டு முன்னேறினார்கள்.

தள்ளுமுள்ளு

ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் சிறிதுநேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

1 More update

Next Story