மணக்குள விநாயகர் தங்கக்கவசத்தில் அருள்பாலிப்பு


மணக்குள விநாயகர் தங்கக்கவசத்தில் அருள்பாலிப்பு
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப் பட்டது.

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இடைவிடாது லட்டு பிரசாதம் வழங்கப் பட்டது.

தங்கக்கவசம்

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்பட்டது. இதையொட்டி பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கே நடைதிறக்கப்பட்ட விநாயகருக்கு அபிசேஷக அலங்காரங்கள் நடைபெற்றன.

மூலவருக்கு தங்கக்கவசமும் அணிவிக்கபட்டது. உற்சவருக்கும் ராஜ அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

லட்டு பிரசாதம்

காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசித்தனர். பக்தர்களுக்கு இடைவிடாது லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. பிற்பகல் 1 மணிமுதல் 2 மணிவரை மட்டும் நடை சாத்தப்பட்டு அதன்பின் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நேற்று தனி நபர் அர்ச்சனைகளும் ரத்து செய்யப்பட்டன. பக்தர்கள் தரிசனத்துக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டது. புதுவைக்கு சுற்றுலா வந்த பக்தர்களும் நேற்று கோவிலுக்கு வந்து மணக்குள விநாயகரை தரிசித்தனர்.

விநாயகர் கோவில்கள்

பக்தர்கள் கூட்டம் காரணமாக மணக்குள விநாயகர் கோவில் பகுதிகளை சுற்றியிருந்த பகுதிகளில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டிருந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் போலீசாரும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேபோல் புதுவை நகரப்பகுதியில் காரமணிக்குப்பம் சுந்தரவிநாயகர், முத்தியால்பேட்டை ஆதிவிநாயகர், குயவர்பாளையம் முத்துவிநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவினையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story