புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் பொறுப்பு ஏற்பு


புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் பொறுப்பு ஏற்பு
x

புதுச்சேரி மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

புதிய டி.ஜி.பி. நியமனம்

புதுச்சேரி மாநிலத்தின் டி.ஜி.பி.யாக ரன்வீர்சிங் கிறிஸ்ணியா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லாலை உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது. இதற்கிடையே புதுவை காவல்துறை தலைமையகத்தில் டி.ஜி.பி.ரன்வீர்சிங் கிறிஸ்ணியாவுக்கு வழியனுப்பு விழா இன்று காலை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பொறுப்பு ஏற்பு

தொடர்ந்து மாலையில் புதிய டி.ஜி.பி. பொறுப்பேற்கும் விழா நடந்தது. இதில் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக மனோஜ்குமார் லால் பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் போலீஸ் டி.ஜி.பி.மனோஜ் குமார் லாலிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, ரன்வீர்சிங் கிறிஸ்ணியா விடைபெற்றார்.

விழாவில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

1 More update

Next Story