தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை


தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை
x

வருமானம் இல்லாததால் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

வில்லியனூர்

|லாசுபேட்டை பீமன் நகரை சேர்ந்தவர் விஜயகாண்டீபன். இருசக்கர வாகன மெக்கானிக். இதற்காக சுல்தான்பேட்டை மெயின்ரோட்டில் கடை வைத்துள்ளார். அவரது மனைவி இளவரசி (வயது 32).

கடந்த சில நாட்களாக சுல்தான்பேட்டை மெயின்ரோட்டில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் கடைக்கு சரிவர வாடிக்கையாளர்கள் வரவில்லை. எனவே வருமானம் இன்றி மன உளைச்சலில் விஜயகாண்டீபன் இருந்து வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் தனது கடையில் மின் வயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story