மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்


மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

வெங்கடேஸ்வரா தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களின் திறனை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

திருபுவனை

புதுச்சேரி அரியூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உலகளாவிய திறமை பாதை அடித்தள அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு உள்ளது. கல்லூரி தாளாளர் ராமச்சந்திரன் வழிகாட்டுதலின்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரதீப் தேவநேயன் கையெழுத்திட்டார். அப்போது கல்லூரியின் டீன் ஜெயராமன் மற்றும் துறை தலைவர்கள் உடனிருந்தனர். இந்த ஒப்பந்தத்தின்படி மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சியின் தொடக்கமாக 'பார்க்லேஸ் லைப்' திட்டமானது மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்காக நடைபெற்றது. இதில் சிக்கல்களை எதிர்கொண்டு தீர்வுகாணும் புதிய சிந்தனைகள், தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அதிகாரி ஆனந்தராஜ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story