மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம்


மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம்
x

காரைக்கால் மாவட்ட கொம்யூன் தோறும் மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று துணை கலெக்டர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கோட்டுச்சேரி

காரைக்கால் மாவட்ட கொம்யூன் தோறும் மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று துணை கலெக்டர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

விபத்தில் மாணவர் உயிரிழப்பு

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த என் ஜினீயரிங் கல்லூரி மாணவர் கமல்நாத் என்பவர் லாரி மோதி உயிரிழந்தார். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராத காரணத்தாலேயே அம்மாணவன் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள், நண்பர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே, ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் நேற்று மாவட்ட துணை கலெக்டர் ஜான்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பயிற்சி கலெக்டர் சம்யக் ஷி.ஜெயின், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி அங்காளன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணகி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-

மொபைல் ஆம்புலன்ஸ்

விபத்து ஏற்பட்ட உடனே, சரியான நேரத்திற்கு செல்லாத ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விபத்துகளை தவிர்ப்பதற்காக காரைக்காலில் அந்தந்த கொம்யூனிலும் மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பொறுப்புடனும், கவனமுடனும் செயல்பட வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்படும். அதேபோல் லாரி டிரைவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் கவனமுடனும், அதிவேகத்தில் செல்லாமலும் இருக்க வேன்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story