மோட்டார் சைக்கிள்கள் மோதல்

காரைக்கால் அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதியதில் 2 போ் படுகாயமடைத்தனா்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த சேத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது 32) நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று அவர் சாலையின் மறுபக்கத்திற்கு செல்ல முயன்ற போது தாமனங்குடி கிராமத்தை சேர்ந்த சிங்காரவேலர் (35) என்பவர் எதிர்புறம் வந்தார். எதிர்பாராத விதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சைபெற்று வீடு திரும்பினர்.
விபத்து குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த கேமராவில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






