நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்


நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
x

புதுவை நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதுச்சேரி

புதுவை நயினார் மண்டபத்தில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 40-ம் ஆண்டு செடல் உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவில் சிறப்பு அலங்காரத்தில் நாகமுத்து மாரியம்மன், முத்து மாரியம்மன் வீதிஉலா நடைபெற்றது.

விழாவில் வருகிற 17-ந்தேதி காலை 108 பால்குடம் ஊர்வலமும், இரவில் முத்து பல்லக்கில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது. 19-ந்தேதி முளைப்பாரி ஊர்வலமும், 21-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவமும், தேரோட்டமும் நடைபெறுகிறது. 4-ந்தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.


Next Story