நிர்வாண நிலையில் பெண் பிணம்

காரைக்கால் வாய்க்காலில் நிர்வாண நிலையில் பெண் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால்
காரைக்கால் வாய்க்காலில் நிர்வாண நிலையில் பெண் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாய்க்காலில் பிணம்
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையம் அருகே, தியாகி திருநாவுக்கரசு நகர் வாய்க்காலை ஒட்டிய வயல்வெளிகளில் சிறுவர்கள் சிலர் நேற்று நத்தை பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள வாய்க்காலில், 40 வயது மதிக்கத்தக்க பெண், நிர்வாணமாக மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த சிறுவர்கள் ஊருக்குள் வந்து அங்கிருந்தவர்களிடம் இதுபற்றி தெரிவித்தனர். அதன்படி அங்கிருந்தவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் காரைக்கால் நகர போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் பலாத்காரமா?
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்த பெண் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது பற்றி தெரியவில்லை. அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் ஊதிப் போய் இருந்தது. போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






