பிள்ளைச்சாவடி மக்களிடம் நாராயணசாமி குறைகேட்டார்


பிள்ளைச்சாவடி மக்களிடம் நாராயணசாமி குறைகேட்டார்
x

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பிள்ளைச்சாவடி மக்களிடம் நாராயணசாமி குறைகேட்டார்.

காலாப்பட்டு

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடலில் எழுந்த ராட்சத அலையால் புதுவையை அடுத்த பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில் கடற்கரையோரம் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதனால் மீனவர்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் இன்று பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது வட்டார காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

1 More update

Next Story